• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் ஏற்படும் நற்பயன்கள்

Dez. 23, 2022

துர்க்கையை சர்ப்ப கிரங்களான ராகுவும் கேதுவும் வழிபட்டதாலேயே கிரக பலனை பெற்றன என்பது புராணம்.  ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர் என்று அது மேலும் விபரிக்கிறது.

அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள். அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.

மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோ‌ஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோ‌ஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி, திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவற்றை நீக்கிக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டி னால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed