• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடகொரியாவில் யாரும் சிரிக்கவோ அழவோ கூடாதாம்! மீறினால் ஆபத்து

Dez 23, 2022

வடகொரியாவில் மக்கள் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று அர்த்தமற்ற கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. வினோதமான சர்வாதிகார சட்டங்கள் அமலில்
உள்ளன.

அவரது அனுமதியின்றி அங்கு எதுவும் அசையாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமலில் உள்ளன.இந்தநிலையில், வடகொரிய மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கிம் ஜாங்வுன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிச., 17 முதல் 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாட்களும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக

துக்க நாட்களில் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாட்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது. 


11 நாட்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு பத்திரிகைகள் மேற்கோள் காட்டியுள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed