• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் – அச்சுவேலியில் வீடுபுகுந்து மர்மக் கும்பல் தாக்குதல்

Dez 22, 2022

யாழ்ப்பாணம் – அச்சுவேலி தென்மூலைப் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மூலை கைத்தொழில் பேட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட இனம்தெரியாத நபர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்கள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, சொத்துச் சேதம் ஏற்படுத்தியதுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மீன் தொட்டிகள் என்பனவும் உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed