• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் அதிகரித்துள்ள போலி நாணயத்தாள் புழக்கம்! பொலிஸார் எச்சரிக்கை

Dez 22, 2022

இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் சிக்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பண்டிகை நாட்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும், சந்தேகநபர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வேலை திட்டத்திற்காக சீருடை அணிந்த பொலிஸாருக்கு மேலதிகமாக, சிவில் உடையில் பொலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடை மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொள்ளையர்கள், வாகன திருடர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெறும் ஒவ்வொரு தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளியிலுள்ள அதிகாரிகள் மேல் மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed