• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குருநாகலை வாகன விபத்தில் 3 பெண்கள் பலி!

Dez 21, 2022

குருநாகல் – நாரம்மல வீதியில் பெந்திகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மதகு ஒன்றில் மோதி, வீதியில் வழுக்கி முன்னோக்கிச் சென்று, அருகில் இருந்த பேருந்து தரப்பிடத்தில் காத்திருந்த மூன்று பெண்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் மூன்று பெண்கள் படுகாயமடைந்து நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பெந்திகமுவ, நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களாவர்.

இரண்டு பெண்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய பெண்ணின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வேன் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed