• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில்

Dez 21, 2022

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (21-12-2022) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ததாகவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed