• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடற்கரையில் ஒதுங்கிய சடலம்

Dez 21, 2022

கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி ஆழியவளை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இச் சடலம் இன்று (21) பிற்பகல் வேளையில் இந்த கரையொதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளதால் அடையாளம் காண சிரமமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed