வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 100மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், தங்களுடைய கால்நடைகளை இக்காலப் பகுதிகளில் மிகவும் கவனமாக பராமரிப்பதுடன், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து அல்லது மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.