கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி இன்று(18.12.2022) நடைபெற்றது.
இந்த இறுதி போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் மோதிக்கொண்டன.
முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்ஸும் தமது 3 ஆவது உலக சாம்பியன் பட்டத்தை குறிவைத்து களமிறங்கின.
பெனால்டி முறையில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தியது.
இதன்மூலம் கத்தார் 2022 FIFA உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டினா வென்றெடுத்தது.
இன்றைய ஆட்டத்தின் ஆரம்பத்திலே கோல் அடித்து மெஸ்ஸி ரசிகர்களுக்கு நம்பிக்கையை வழங்கி போட்டியை விறுவிறுப்பாகினார்.
இதற்கமைய ஆட்டம் தொடங்கிய 22 ஆவது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது.
இதன் பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது ஆர்ஜென்டினா அணிக்கு எதிராக கோல் போடும் முயற்சியில் பிரான்ஸ் அணி பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சிகளில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்தது.
ஆனால் பிரான்ஸை திணரடிக்கும் வகையில் 36 ஆவது நிமிடத்தில் டி மரியா இரண்டாவது கோலை அடித்தார்.
இந்நிலையில் தாமும் சலைத்தவர்கள் இல்லை எனும் அளவிற்கு அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது பிரான்ஸ்.
தனது அணிக்காக கைலியன் மப்பே கோல் அடித்துக்கொடுத்து போட்டியின் போக்கையே மாற்றிவிட்டார்.
இதில் தனது முதல் கோலை பெனால்டி முறையை பயன்படுத்தி கைலியன் மப்பே மிக கச்சிதமாக அடித்தார்.
இந்நிலையில் போட்டி சமநிலையை அடைந்தது.இரு அணிகளும் தமது இலக்கை அடைய பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ஜென்டினா அணியின் பெரும்பாலான கோல் முயற்சிகளை பிரான்ஸ் முறியடித்தது.
இரு அணியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்புடனே நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரம் முடிவடைந்தது.
இதன்போது மேலதிகமாக 30 நிமிடங்கள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலதிக ஆட்ட நேரத்தில் கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி மற்றுமொரு கோல் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.
இதற்கமைய மேலதிக ஆட்ட நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ்ஸை பின்தள்ளி ஆர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
ஆர்ஜென்டினா அணி தான் வெற்றி பெரும் எனும் எண்ணும் மீண்டும் ஒருமுறை கைலியன் மப்பே தன்னை நிரூபித்தார்.
மற்றுமொரு பெனால்டி வாய்ப்பை தம்வசப்படுத்தி ஒரு கோல் அடித்து 3-3 என போட்டியை சமப்படுத்தினார்.
மேலதிக ஆட்ட நேரம் சமநிலையில் முடிந்ததால் இறுதி முடிவை எட்டுவதற்காக இரு அணிகளுக்கும் ஐந்து வாய்ப்புக்கள் அடங்கிய பெனால்டி முறை வழங்கப்பட்டது.
இந்த பெனால்டி முறையில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது ஆர்ஜென்டினா அணி.
இந்த இறுதி போட்டி உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக பிரகாசிக்கும் லயனல் மெஸிக்கும் கிலியான் எம்பாப்பேக்கும் இடையிலான போட்டியாகவே அமைந்தது.
ஆர்ஜென்டினா 6ஆவது தடவையாகவும் பிரான்ஸ் 4ஆவது தடவையாகவும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடின.
1978இலும் 1986இலும் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த ஆர்ஜென்டினாவும் 1998இலும் 2018இலும் உலக சாம்பியனான பிரான்ஸும் மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு களமிறங்கின.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய இரண்டு நாடுகளே அடுத்தடுத்த அத்தியாயங்களில் உலக சாம்பியனாகியுள்ளன.
அந்த வரலாற்றுச் சாதனையை 60 வருடங்களின் பின்னர் சமப்படுத்த பிரான்ஸ் இம்முறை முயற்சித்தது.
உலகக் கிண்ணத்தில் இரண்டு நாடுகளும் சந்திப்பது இது 4ஆவது தடவையாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆர்ஜென்டினா 2 தடவைகள் வெற்றிபெற்றதுடன் கடைசியாக பிரான்ஸ் 2018இல் வெற்றி பெற்றது.
இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய சகல வகையான 12 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆர்ஜென்டினா 6 – 3 என முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
வெற்றி பெற்ற அணிக்கான பரிசு தொகை
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் சாம்பியன் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 42 மில்லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா) பணப்பரிசு வழங்கப்படும்.
2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்லியன் டொலர்கள் (1,113 இலங்கை கோடி ரூபா) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.