ஜேர்மனியில் ஹொட்டல் ஒன்றில் உள்ள மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி வெடித்த விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
தலைநகர் பெர்லினில் உள்ள Radisson Blu என்ற ஹொட்டலின் முகப்பில் 46 அடி உயர மீன் காட்சித்தொட்டி அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொட்டியாக கூறப்படும் இது ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிறைந்திருந்தது.
இந்த நிலையில் மீன் காட்சித்தொட்டி திடீரென வெடித்தது. இதில் இருவர் காயமடைந்தனர். மில்லியன் லிட்டர் தண்ணீர் வீதிகளில் ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள், அங்கு சேதமடைந்த கண்ணாடி உள்ளிட்ட அபாய பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், வளாகத்திற்கு அடுத்ததாக ஒரு பெரிய சாலை மூடப்பட்டது. பெர்லினின் முக்கிய சுற்றுலா அம்சமாக திகழும் இந்த மீன் காட்சித்தொட்டி வெடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், உறைபனி வெப்பநிலை கசிவுக்கு பங்களித்ததாக கூறப்படுகிறது. பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.