• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலோலி பகுதியில் வீடு வீட்டை உடைத்து திருடிய நபர்

Dez. 15, 2022

வீட்டு உரிமையாளர் வைத்தியசாலை சென்றிருந்த வேலை வீட்டை உடைத்து திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை (14) குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் SI.விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. விசாரணையின் பின்னர் இன்று(15) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed