• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2022 உலகக்கோப்பை-1 வது அரை இறுதி போட்டி குரோஷியா அணியுடன் மோதும் அர்ஜென்டினா

Dez 13, 2022

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. 

இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் குரோஷியா, அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 

1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை. 

கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. 

அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed