மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூறாவளியால் பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதோடு வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.