• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனை வராதாம்..

Dez 5, 2022

சிறுநீரகக்கல் பிரச்சனை வந்தால் ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனடியாக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக புடலங்காய் சுரைக்காய் பரங்கி வாழைத்தண்டு வெள்ளரிக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் 

சிறுநீரக பிரச்சனைக்கு ஒரே தீர்வு வாழைத்தண்டு சாறு குடிப்பது தான் என்று பழங்கால மூத்தவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். திரவ உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மீண்டும் அந்த நோய் வர விடாமல் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிகமாக நீர் அருந்துதல் இளநீர் பழச்சாறு அருந்தினால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மசாலா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக நண்டு, மீன் இறால் முட்டையின் வெள்ளைக்கரு பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது

காபி தேநீர் குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் சாக்லேட் ஆகியவற்றை அளவோடு உண்டால் சிறுநீரகக்கல் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed