• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்த புடின்

Dez. 4, 2022

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கிரெம்ளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் போது அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் அவருக்கு உதவ விரைந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி புடின்(Vladimir Putin) கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. அவருக்கு ஆரம்ப கட்ட பார்கின்சன் நோய் மற்றும் கணைய புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய ஆவணங்கள் சமீபத்தில் கசிந்தன.

புடினின் உடல்நிலை குறித்த சமீபத்திய குற்றச்சாட்டு ரஷ்ய டெலிகிராம் சேனலான ஜெனரல் SVR இலிருந்து வெளியாகியுள்ளது. இந்த தகவல் கிரெம்ளின் உள்நாட்டவர் மூலம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. இதன்படி, ரஷ்ய ஜனாதிபதி கீழே நடந்து கொண்டிருந்தபோது, ​​தடுமாறி விழுந்தார் எனவும் அதன் பிறகு அவர் பக்கவாட்டில் விழுந்து இரண்டு படிகள் கீழே சரிந்தார் எனவும் கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed