• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் நடந்த வாள் வெட்டு – இருவர் படுகாயம்!

Dez 3, 2022

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed