• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உயிரை மாய்த்த பல்கலைக்கழக மாணவி !!

Dez 3, 2022

வடமராட்சி, கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரை மாய்த்துள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னர் இவருக்கு பதிவுத் திருமணம் நடந்துள்ளது. தற்போது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

ற்கொலைக்கு முன்னதாக தனது சகோதரிக்கு கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில், தனது மரணத்திற்கு தானே காரணம் என்றும், பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொலைபேசி பாவனை பற்றிய சில அறிவுரைகளையும் தங்கைக்கு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னதாக அவர் தொலைபேசியில் நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்ததாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறிப்பிட்ட மாணவி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற போதும், பகிடிவதை காரணமாக மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed