• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் ! 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Dez 1, 2022

பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (30-11-2022) கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed