கனடாவின் வான்கூவார் பகுதியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று வான்கூவாரில் 4.8 மாக்னிடியுட் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நில நடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இரவு 7.50 மணியளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வான்கூவாரின் டோபினோவிற்கு வடமேற்கு பகுதியில் சுமார் 34 கிலோ மீற்றர் தொலைவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
வீடுகள் ஆட்டம் கண்டதாகவும் நில நடுக்க முன்ஆயத்தங்களை செய்யுமாறு மக்களிடம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நில நடுக்கம் உணரப்பட்டமை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டிருந்தனர்.
வியாழக்கிழமையும் குறித்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நில அதிர்வு சுமார் 4 மக்னிடியூட் என அளவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.