• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விபத்தில் உயிரிழந்த மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் குருக்கள்

Nov 24, 2022

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் விபத்தொன்றில் இன்று வியாழக்கிழமை (நவ 24) காலை காலமானார்.

1962 பெப்ரவரி 05ஆம் திகதி பிறந்த இவர் அமரர் சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்களின் இரண்டாவது மகனாவார். சாதாரண கிரியைகள் முதல் மஹா கும்பாபிஷேகம் போன்ற பெரும் மஹோற்சவங்களை முன்னின்று நடத்தி, பல வருடகாலமாக சிவானந்த குருக்கள் இறைபணியாற்றி வந்தவர் ஆவார்.

மேலும் இவர் இனம், மதம், மொழிகளை கடந்து அனைவரிடமும் மனிதநேய குணத்தோடு இயல்பாக பழகக்கூடியவர். இந்நிலையில் இவரது மறைவுக்கு பல்லரும் ஆழ்ந்த இரங்கல்களை கூறிவருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed