• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு! 10 பேர் பலி

Nov 23, 2022

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் செஷபீக் நகரில் உள்ள பிரபல வால் மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். 

இதனால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மக்கள், ஊழியர்கள், அலறியடித்து கொண்டு ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து அங்கு சிக்கி இருந்தவர்களை போலீசார் மீட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியானதாக தகவல் வெளியானது. 

ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து உடனடியாக தெரிவிக்கப்படாமல் இருந்தது. உள்ளூர் ஊடகங்கள் கூறும்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. 

ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை 10-க்கும் மேல் இருக்காது என்று தெரிவித்தனர். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகி உள்ளதாகவும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக செஷபீக் நகர போலீசார் கூறும்போது, வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

துப்பாக்கியால் சுட்ட நபர் இறந்து விட்டார் என்றனர். ஆனால் மர்ம நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை போலீசார் சுட்டு கொன்றார்களா? என்பது தெரிவிக்கவில்லை. 

மேலும் அந்த நபரின் விவரங்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed