• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம்? 10ல் கூட வராத ட்விட்டர்!

Nov. 23, 2022

மாதம்தோறும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ட்விட்டரின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதிலும் பேஸ்புக், ட்விட்டர் தொடங்கி இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட வீடியோ சமூக வலைதள செயலிகள் வரை பலரால் பல செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.இந்நிலையில் வேர்ல்ட் ஆப் ஸ்டாட்டிக்ஸ் என்ற அமைப்பு மேற்கொண்ட சர்வேயில் அதிகமான கணக்குகள் இருந்தாலும் எந்த சமூக வலைதளம் மற்றும் செயலி மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாதம்தோறும் அதிகமான பயனாளர்கள் பதிவிடும், பயன்படுத்தும் செயலியாக 2.9 பில்லியன் ஆக்டிவ் யூசர்களுடன் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. யூட்யூபை மாதம்தோறும் 2.2 பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸப் செயலியை 2 பில்லியன் நபர்கள் மாதம்தோறும் பயன்படுத்துகின்றனர். ஆனால் வாட்ஸப் சுமார் 5 பில்லியன் மொபைல்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed