கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஒரு சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இருப்பதன் காரணமாக முக்கிய நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அமேசான் பேஸ்புக் ட்வீட்டர் உள்பட பல நிறுவனங்களில் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யுமாறு அந்தந்த பிரிவின் மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.