• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து இளைஞன் பலி

Nov 20, 2022

யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது நிறை போதையில்  நிலை தடுமாறி கிணற்றினுள் விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed