• Fr.. Mai 2nd, 2025 8:01:52 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்

Nov. 19, 2022

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed