ஜப்பானிய பெண் ஒருவர் மேஜிக் துணியை போல ஒன்றை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மறைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்ணுக்கு தெரியாததை கண்டுபிடித்தனர் என்ற தலைப்பில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு அலுவலகத்தில் பெண் ஒருவர் மேஜிக் துணி ஒன்றை எடுத்து வருகிறார். மேஜிக் துணியை கொண்டு தனது உடலை மறைக்கிறார். அப்போது அவரது உடல் மறைந்து அவருக்கு பின்னால் இருப்பது கண்ணாடி போல் தெரிகிறது.
அதன்பிறகு, துணியை வைத்து தனது உடல் முழுவதையும் மறைக்கிறார். கண்ணுக்குத் தெரியாத துணியை பயன்படுத்தி தனது உடலை மறைத்தது போல் இது தோன்றினாலும், பச்சை நிற திரையை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் எடிட்டிங் செய்து இந்த வீடியோவை எடுத்ததாக சிலர் பதிவிட்டுள்ளனர். வீடியோவின் ஓரத்தில் பச்சை நிற திரை தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
மற்றொரு பயனர் ஒருவர் மேஜிக் துணியை பயன்படுத்தி உடலை மறைக்கும் மற்றொருவரின் வீடியோவை வெளியிட்டு இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது ஜப்பானியர்கள் அல்ல என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 24 ஆயிரம் முறை இந்த வீடியோவை ரீடுவிட் செய்துள்ளனர்.