இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் எமக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. சுமாத்ரா தெற்கில் ஏற்பட்டுள்ள 6.8 ரிச்டர் நிலநடுக்கத்தினால் இலங்கை கரையோர பிரதேசங்களிற்கு எதுவித பாதிப்பும் இல்லை.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலகத்திற்கும் அறிவுறுத்தல் எம்மால் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.