• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீரென நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞன்!

Nov 17, 2022

யாழ்ப்பாணம் – செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குளத்திற்கு அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தனியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடி வருகின்றனர். எனினும் குறித்த இளைஞர் காணவில்லை.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed