• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாய் கைதடி பகுதியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம் !

Nov 13, 2022

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (13-11-2022) காலை கோப்பாய் கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமொன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதான பணியில் ஈடுபடும்போது மர்மப்பொருளொன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த சம்பவ தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed