• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மேருமலையே கீரிமலை ஆகும் 

Nov 12, 2022

சிவபூமி என்பது இலங்கு கை என்று மகாலட்சுமிக்கு  கிருஸ் ன  பகவானால் அளிக்கப்பட்டது .இலங்கு கை ,மருவி இலங்கை ஆனது .மேருமலையே கீரிமலை ஆகும் .சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. 

வடக்கே யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரம், வடமேற்கே மன்னாரில் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் திருகோணேச்சரம், மேற்கே புத்தளத்தில் முன்னேச்சுரம், தெற்கே மாத்துறையில் தொண்டீச்சரம் என ஐந்து சிவாலயங்கள், இலங்கை வேந்தன் ராவணனால் எழுப்பப்பட்டன. இதில் ஐந்தாவது தலம் கடலில் அமிழ்ந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நந்தி சிலை மட்டும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக, தெய்வத்துறையில் சந்திரலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இனி நகுலேஸ்வரம் பற்றி இப்பதிவில் ஆராய்வோம் நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். 

இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். 

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.
முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை ஆனால் பொதிகைமலையில் இருந்து திரும்பிய அகத்தியரை ,மேரு மலை வழி மறித்தததாக வும் ,அதனால் இந்த மலையை அமிழ்த்தினார் என்று திருகா.செ .நடராசர் கூறியது ஞாபகத்தில் வருகிறது அதைவிட மேரு என்றால் பெண் குறி போன்ற அமைப்புள்ளது என்றும் ,இந்த மேரு மலையில் நின்று குமரி ஆறு ஓடியதாகவும் .அதன் மிச்ச சொச்சமே வழுக்கி யாறு என்றும்  ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் தம்பா பிள்ளை ஆசிரியர் எனக்கு கூறியதும் நினைவில் நிற்கிறது.

எது என்னவோ குமரிக்கண்டம் இருந்ததாகவும் அதன் மிச்ச சொச்ச மே கிரி மலை என்றும்  அதாவது சுண்ணாம்பு வெள்ளை பாறைகள் அங்கு இருந்ததால் அதனை வெண் மலை என்று கூறியதாகவும் சிலர் சொல்கிறார்கள் முன்னொரு போது மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். 

கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்(.இது மாவிட்டபுரம்)போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. 

கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.அருட்கவி விநாசித்தம்பி அவர்கள் கோவில் (கூவில் )  கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பாடல் வேண்டும் என்று கூறியதாக  புலவர்   அளவெட்டி சிற்றம்பலம் எனக்கு கூறியிருக்கிறார்.

சிலவேளை சங்கேத மொழிகள்  இருந்தால் அல்லது பாடல் மூலம் பதிவு செய்திருந்தால் இவற்றைக் கண்டு பிடிக்க முடியும் எது எங்கேயோ ?போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு ஆறுமுக நாவலர் முயற்சி எடுத்தார். 1878 ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1895 ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு ஆறுகாலப் பூசைகளும் நித்திய கிரியைகளாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.

நகுலேசுவரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இக்கோயிலின் சிறப்பைக் கூறுகின்ற படியால் தமிழ் கற்றோர் இதை ஆராய்ந்து அன்றைய சக்தி மிக்க விக்கிரகங்களை  ஆறு திருமுருகன் போன்ற பெரியோர்கள் தேடி   கண்டு பிடிக்கப்படல் வேண்டும் சுசங்கீதன் என்ற கந்தருவன், இராவணனின் யாழை உபயோகித்து இசை வழிபாடாற்றி, இறைவனிடமிருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொண்டான்.

கைலாச புராணத்தில் காணப்படும் இக் கதையின் மூலம், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மக்கள் வாழ்க்கை பரவத் தொடங்கியதற்கு முன்பாகவே நகுலேஸ்வரம் அங்கே நிலைபெற்று விளங்கியது என்பதை அறியக்கூடியதாக உள்ளது.கீரிமலைத் தலத்தின் மகிமையை மாருதப்புரவல்லி கதை மிகவும் சுவையாக விளக்குகின்றது.தென் இந்தியாவில், சோழ தேச அதிபதியாகிய திசையுக்கிர சோழன் என்பவனுக்கு, மாருதப்புர வல்லி என்னும் மகள் இருந்தாள். அவள் முகம் மனித முகமாக இல்லாமல், குதிரையின் முகத்தைப்போல இருந்தது.மேலும், அவளுக்குக் குன்ம வியாதி பீடித்திருந்ததால், அவளது உடல் மெலிந்து, மிகப் பலவீனமாயிருந்தாள். 

சோழ தேசத்திலிருந்த பிரபல வைத்தியர்கள் எவராலும், அவளைக் குணப்படுத்த முடியவில்லை. அவள் வாலிப வயதடைந்து, மணப்பருவம் எய்தியும், யாருமே அவளைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.மகளின் நோயையும், கவலையையும் கண்டு, தந்தை மிக்க கவலையுற்றான். அப்போது, சாந்தலிங்கன் என்னும் ஒரு சந்நியாசி அவளைச் சந்தித்து, “மகளே, நீ இனிமேல் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கோயில்களைத் தரிசித்து, அங்குள்ள புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடி வந்தால், இறைவன் அருளால் உன் நோயும், உன் தந்தையின் கவலையும் தீரும் ” என்று அறிவுரை கூறினார்.

அதன்படி, மாருதப்புரவல்லி தன் நெருங்கிய சில தோழிகளோடும், சில உண்மையான காவலர்களோடும் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்திலுள்ள கோயில்களை முறைப்படி தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியும் வந்தாள். அவ்வாறே, அவள் யாழ்ப்பாணம் வந்தடைந்து, கீரிமலை நகுலேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கே வந்து சேர்ந்தாள்.அங்கே தவம் செய்துகொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன் குறைகளையெல்லாம் கூறி அழுதாள். அவளைத் தேற்றி, ஆறுதல் கூறிய நகுல முனிவர், கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமைகளைக் கூறி, அவளை அங்கேயே தங்கித் தீர்த்தமாடி, இறைவனை வணங்கிவருமாறு கூறி ஆசீர்வதித்தார்.

நகுல முனிவரின் ஆசிர்வாதத்துடன், மாருதப்புரவல்லி அங்கேயே தன் தோழிகளோடும், காவலர்களோடும் கூடாரம் அமைத்துத் தங்கித் தினமும் கீரிமலைத் தீர்த்தத்தில் பயபக்தியுடன் நீராடி, நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் அன்புடன் வழிபட்டு வந்தாள்.இறைவனின் அருளால், சில நாட்களிலேயே அவளது குதிரை முகம் மாறி, பேரெழில் மிக்க இளம் பெண்ணுக்குரிய முகம் அமைந்தது.அவளது உடல் நோய் நீங்கி, வலிமையும், வனப்பும் பெற்றது. இதைக் கண்டு, மாருதப்புரவல்லியும், அவளுடன் வந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அந்த நற்செய்தியை அவளின் தந்தைக்கும், ஏனையோர்க்கும் அறிவித்துவிட்டு, மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அச் சந்தர்ப்பத்தில், கதிரைமலையிலிருந்து, உக்கிரசிங்க மகாராஜன் தன் படை பரிவாரங்களுடன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க வந்தான். நகுலேசரின் சந்நிதியில், பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்த மாருதப்புரவல்லியைக் கண்டான்.அவளது பேரழகையும், தெய்வ பக்தியையும் கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்து, நகுல முனிவரின் ஆசீர்வாதத்துடன் அங்கேயே அவளை வெகு சிறப்பாக மணம் செய்துகொண்டான்.இருவரும் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்து, நகுலேஸ்வரரை வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தனர்.

கீரிமலைத் தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கவல்லது என்பதற்கு மாருதப்புரவல்லியின் கதை போன்று மேலும் பல கதைகள் உள்ளன.
ஆதி காலத்து நகுலேஸ்வரத்திலே, மூன்று பிராகாரங்களும், ஐந்து கோபுரங்களும் இருந்தன என்பது ஐதீகம். கி.பி.ஆயிரத்து அறுநூற்று இருபத்தொன்றாம் ஆண்டிலே, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், நகுலேஸ்வரம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முதலிய ஏராளமான இந்துத் திருக்கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அங்கிருந்த விலையுயர்ந்த பூஜைக்குரிய பொருட்களையும், வழிபாட்டுப் பொருட்களையும் கொள்ளையடித்தனர். அக்காலத்தில், கீரிமலை நகுலேஸ்வரர்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பரசுபாணி ஐயர் என்பவர், கீரிமலைத் தலத்திலிருந்த ஆலயங்களின் விக்கிரகங்களையும், பூஜைக்குரிய பாத்திரங்களையும் ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்தார்.இவ்வாறு பலரும், இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, இறைவனுக்குரிய பக்திப் பொருட்களை அன்னியர்கள் கைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக அவற்றை மண்ணில் புதைத்ததாகவும், ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்ததாகவும் வரலாற்று ஏடுகள் உரைக்கின்றன. ( இந்தியாவிலும், அன்னியர் ஆட்சியின்போது இவ்வாறே நடந்தது. )அவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விக்கிரகங்களில் சில, மண்ணைத் தோண்டும்போது அல்லது கிணறுகளைத் தூர் வாரும்போது கிடைக்கப்பெற்று, மீண்டும் கோயில் கண்டன.

ஆனால், கீரிமலைச் சிவன் கோயிலுக்குரிய விக்கிரகங்களும், பூஜைப் பொருட்களும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. இது நம் துரதிர்ஷ்டமே.
ஏறக்குறைய நூற்றெண்பது வருடங்களின்பின், ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களின் பெருமுயற்சியால், இக்கோயிலை மீண்டும் கட்டிஎழுப்புவதற்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு, மன்மத வருடம், ஆனி மாதத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஆனால், ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு, அக்கோயில் தற்செயலாகத் தீப்பிடித்து எரிந்தது.அதன்பின்னர், பல இந்துமத அபிமானிகள் முன்னின்று உழைத்து, கோயிலை மீண்டும் அழகுறக் கட்டியெழுப்பி, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்துமூன்றாம் ஆண்டில், கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

கீரிமலைச் சிவன் கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கோபுர வாயில், பரிவாரத் தேவர் சந்நிதிகள், பிராகாரம் எனும் அமைப்புகளுடன், சிவாகம விதிகளுக்கும், சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமைய உருவாக்கப்பட்டு உள்ளது.இங்கு, ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரேலிங்கத்தில் அமைக்கப்பெற்ற சகரலிங்கம் காட்சியளிக்கின்றது.நிருத்த மண்டபத்தின் வட திசையில் நடராஜரின் திருவுருவம் தெற்கு நோக்கியவண்ணம் அமைந்துள்ளது.இரண்டாம் பிராகாரத்தின் வட புறத்தில், துர்க்கை அம்மன் சந்நிதி காட்சியளிக்கின்றது. நவராத்திரி விழாவும், மானம்பூ விழாவும் அங்கே சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.பிராகாரத்தின் உள்ளே, விநாயகர், முருகப்பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தம், மகா விஷ்ணு, மகா லக்ஷ்மி, பஞ்ச லிங்க வடிவிலான பரமேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் மேற்குப்புறத்தில் காணப்படுகின்றன.கிழக்கிலே, பைரவர் சந்நிதியும், நவக்கிரகங்களின் சந்நிதியும் காணப்படுகின்றன.

நகுலேஸ்வரத்தில், சிவாகம விதிமுறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சித்திரைப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மானம்பூ, புரட்டாசிச் சனி வாரம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாயில் ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் முதலான தினங்களில் சிறப்பான உற்சவங்கள் நடைபெறும்.
ஆடி அமாவாசை நாளில், பக்தர்கள் பெருங் கூட்டமாக வந்து தீர்த்தமாடி இறைவனைத் தரிசனம் செய்வார்கள்.கீரிமலைச் சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று, தீர்த்த உற்சவம் நடைபெறும். அம்மன் கோயிலில், பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பன்று, தேர்த் திருவிழாவும், தீர்த்தமும் நடைபெறும்.இலங்கைத் தீவின் சகல திசைகளில் இருந்தும், தென் இந்தியாவிலிருந்தும் மக்கள் தல யாத்திரையாக இக் கோயிலுக்கு வந்தார்கள். மேலும், இத் திருக்கோயில் சமுத்திரக் கரையில் அமைந்திருப்பதால், நீத்தார் (இறந்தோர்) கடமைகளான அந்தியேட்டி, திவசம், சபிண்டீகரணம், அஸ்தி சஞ்சயனம் முதலிய கிரியைகளுக்குச் சிறப்பாகவுள்ள புண்ணியத்தலமாகவும் விளங்குகின்றது.

பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தபோது, அதன் துளிகள் இத்தலத்தில் விழுந்து, தீர்த்தம் உருவானதாக புராணம் கூறுகிறது. 
தவிர அன்னை பார்வதியின் குளியலுக்காக, பரமசிவன் தீர்த்தம் உருவாக்கினார் என புத்த சமய நூலான மகாவம்சம் சொல்கிறது.அர்ச்சுனன்( மேருமலை இங்குதான் இருந்தது )இத்தலத்தில் தவமிருந்து தான், பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது. நகுலமுனிவர் நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம்பெற்ற சிறப்பு மிக்க தலம் இது. எனவேதான் இத்தலத்தை கீரிமலை என்றும், நகுலேஸ்வரம் என்றும் அழைக்கிறார்கள்.இத்தலம் 19-ம் நூற்றாண்டிற்கு முன்பே கடல் கோள் சீற்றத்தினால் நீருக்கு அடியில் அமிழ்ந்து போன விவரத்தை அறிந்த யாழ்ப்பாணப் புலவர் ஆறுமுகநாவலர் எழுதிய கீரிமலைச் சிவன் கோவில் வரலாறு மூலம் இவ்வாலயத்தின் சிறப்பு வெளிவந்தது.இத்தலம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. 

இங்கே வந்து தலத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு சென்றால், அனைத்துவித தோஷங்களும் நீங்கி பலன் பெறலாம். இந்நாட்டில் உள்ள சிங்களவர்களும் வந்து செல்வது இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இதேபோல, சனிக்கிழமைகளில் நீராடி வணங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. சனிதோஷம் நீங்க, காலசர்ப்பதோஷம் நீங்க, பித்ருக்கள் சாபம் நீங்க, தீர்த்தமாடி வழிபடுவது நல்ல பலனைத் தரும். மகப்பேறு பெற உகந்த தலம் இது. குழந்தை பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தத்து கொடுத்து, பின் காணிக்கை செலுத்தி குழந்தையை திரும்பப் பெற்றுக் கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

இத்தலத்தின் சிறப்பே தீர்த்தம் தான். பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள், இம்மண்ணில் விழ, அது புனித தீர்த்தமானது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். கீரிமலைத் தீர்த்தம், கண்டகித் தீர்த்தம், சாகர தீர்த்தம் என பலவாறு இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது.இந்தக் கோவிலிற்கு செய்யும் திருப்பணிகள் பிரம்மகத்தி தோஷத்தை நீக்க வல்லது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed