• Mi.. Feb. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை 

Nov. 12, 2022

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுவை இடையே இன்று கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed