• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மழை: மாவட்டத்தின் மழைவீழ்ச்சி நிலவரம்

Nov. 8, 2022

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றுத் திங்கட்கிழமை(07.11.2022) பிற்பகல்-5.45 மணி முதல் இரவு-8.15 மணி வரை மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் பின்னர் இரவு-8.45 மணி முதல் கடும் மழை வீழ்ச்சியும் இடையிடையே மிதமான மழைவீழ்ச்சியும் பதிவாகியிருந்தது.

இன்று அதிகாலை வரை மழையுடனான காலநிலை தொடர்ந்தமையை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை-8.30 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பதிவாகி உள்ள மழைவீழ்ச்சி நிலவரத்தைத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் வெளியிட்டுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் யாழ்.பருத்தித்துறையில் 42.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 41.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வடமராட்சி அம்பனில் 35.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 26.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அச்சுவேலியில் 23.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரத்தில் 23.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.கோட்டையில் 22.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 19.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 14.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed