• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் 30 நாட்களுக்குள் 183 பேர் அடையாளம்!

Nov. 7, 2022

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 183 பேர் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவப் பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 155 பேர் சிறைச்சாலையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 28 பேர் நீதிமன்றத்தின் ஊடாக அனுப்பப்பட்டடு மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனைவிட தாமாக முன்வந்து சமூகமயப்படுத்தல் சிகிச்சையில் இணைந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed