ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 கார் வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பபைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.