• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தென் கொரியா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!

Okt 30, 2022

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் (1300 GMT) ஏற்பட்ட இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹாலோவீன் கொண்டாட்டத்துக்காக நகரின் பிரபலமான இரவு வாழ்க்கைப் பகுதியான Itaewon இல் பெரும் கூட்டம் கூடியதால் மக்கள் நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை ஹாலோவீன் பண்டிகையின் போது ஏற்பட்ட பேரழிவுக்கு தமது சோகத்தை தெரிவித்துள்ள தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யோல் தேசிய துக்கக் காலத்தை பிரகடனம் செய்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed