• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி

Okt 30, 2022

டுவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி தற்போது டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து ஜாக் டோர்சி கூறுகையில், ‚புளூஸ்கை‘ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தச் செயலி வழக்கமாக ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்கு பதிலாக பல தளங்களால் இயக்கப்படும்.எந்த நிறுவனம் தன் பயனாளர்களின் தரவை சொந்தமாக்க முயற்சி செய்கிறதோ அவற்றிற்கு போட்டியாக புளூஸ்கை இருக்கும். மேலும், பயனர் தரவை மீட்டெடுக்க முடியும்.

பயனர்களின் தரவுகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவர்கள் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர்“என கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு, பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் மற்றும் நோவா கிளாஸ் ஆகியோருடன் இணைந்து ஜாக் டோர்சி நிறுவினார்.

2008 ஆம் ஆண்டில் டுவிட்டரின் தலைவர் பதவியிலிருந்து விலகிச் சென்ற ஜாக் டோர்சி ‚Square’என்ற செயலியை நிறுவினார்.

பின் 2015 ஆம் ஆண்டு அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த டிக் கோஸ்டோலோ தனது பதவியிலிருந்து விலகியதால் மீண்டும் ஜாக் டோர்சி டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

ஆனால் ஒற்றை இலக்குடன் பயணிக்கக் கூடிய தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க வேண்டும் என டுவிட்டரின் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்ததால் டுவிட்டரில் இருந்து ஜாக் டோர்சி பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.

இந்நிலையிலே டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed