• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் வறுமையில் வாடும் பல மில்லியன் மக்கள்!

Okt 26, 2022

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோர் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக வாழ்க்கைச் செலவு பாரிய அளவு அதிகரித்துள்ளமையினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் அதிகரித்துள்ள செலவை கட்டுப்படுத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் வாடிக்கையாளர் அமைப்பான Which நடத்திய ஆய்வில் இது தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 3,000 பேர் கலந்துகொண்டனர் என வாடிக்கையாளர் அமைப்பான Which தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பாதிக் குடும்பங்கள் உணவு வேளைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாக அந்த அமைப்பு கூறியது.

அதே அளவு குடும்பங்கள், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகத் தெரிய வந்தது. சுமார் 80 சதவீதமான பிரித்தானிய மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறினர்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கானோர் உணவு உட்கொள்வதைத் தவிர்க்கின்றனர். அப்படி இல்லை என்றால் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளச் சிரமப்படுகின்றனர் என்று அமைப்பின் உணவுக் கொள்கைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எரிவாயு விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைப் பிரித்தானிய அரசாங்கம் இரத்துச் செய்ததால் மில்லியன் கணக்கானோர் வீடுகளை முறையாகச் சூடாக்க முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் பிரித்தானிய மக்கள் மத்தியில் தற்போதே குளிர் காலம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கான மாற்று நடவடிக்கைகளை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed