• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.மாவிட்டபுரத்தில் திடீரென தீப்பற்றி கருகிய வாகனம்!

Okt. 21, 2022

யாழ்ப்பாணம் –  மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்து இன்றைய தினம் இரவு (21-10-2022) குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்த போது இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீயணைத்த போதும் வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed