• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து நடந்த திருட்டு!

Okt. 19, 2022

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

மட்டக்களப்பு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை 2 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed