• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இரவு இடம்பெற்ற விபத்து: உயிரிழந்த வயோதிபர்.

Okt. 15, 2022

யாழ்.கொடிகாமம் பகுதியிலுள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (15-10-2022) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் (வயது-67) என்பவராவார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி தபால் புகையிரதம் சென்ற போது விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed