• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு

Okt. 9, 2022

பிரான்ஸ் Caen (Calvados) நகரில்உயர்கல்வி பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Caen (Calvados) நகரில் உள்ள Camille Claudel உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை நண்பகல், இப்பாடசாலையின் சிற்றுண்டிச் சாலையில் மாணவர்களுக்கு பாஸ்தா உணவி விநியோகிக்கப்பட்டபோது உணவில் புழு இருப்பது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவர்கள் உணவினை உண்பதற்கு முன்பாகவே இது கண்டறியப்பட்டதை அடுத்து, உணவை உண்ணவேண்டாம் என மாணவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது.

அதன்பின்னர் மாணவர்களுக்கு வேறு மாற்று உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் வழங்கப்பட்ட பாஸ்தா உணவில் புழு இருப்பதை பல மாணவர்கள் தங்களது தொலைபேசியில் படம் பிடித்தனர். மேற்படி சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பாஸ்தா உணவு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed