பிரான்ஸிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தம்பதி எதிர்பாராத விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Normandyயில் உள்ள புகழ்பெற்ற குன்றின் மீது ஏறிய போது இளம் மனைவி தவறி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த இந்திய தம்பதியினர் நேற்று முன்தினம் செல்பி எடுப்பதற்காக குன்றின் மீது ஏறிய நிலையில் மனைவி கீழே விழுந்து காணாமல் போயுள்ளார்.
எனினும் இதுவரையில் அவரது உடல் தேடப்பட்டு வருவதாகவும் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். காணாமல் போன உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 30 வயதுடைய இந்திய சுற்றுலா பயணி என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற குன்றின் உச்சியில் இருந்து செல்பி எடுக்கும்போது தவறி விழுந்துவிட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் அதிகமாக அலை காணப்படுவதால் உடலை தேடுவது கடினமாக உள்ளதென தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழிமுறைகளை முயற்சித்து பார்க்கவுள்ளதாகவும் அதற்கமைய, விரைவில் உடலை கண்டுபிடிக்க முடியும் என நம்புவதாக தீயணைப்பு பிரிவினர் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியில் இருந்த கணவருக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுடில் அந்தப் பகுதியல் ஏற்கனவே இரண்டு அபாயகரமான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.
60 வயதான பெண் ஒருவரும் 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும் அதே முறையில் அவ்விடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.