• Mo. Nov 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் செவ்விளநீருக்கும் தட்டுப்பாடு வரலாம்

Okt 8, 2022

தற்போது வெள்ளை ஈ என்ற பூச்சியால் செவ் செவ்ளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், இளநீருக்கும் தட்டுப்பாடு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் மாதத்துக்குள் இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னந்தோப்புகளில் பரவும் வெள்ளை ஈ பூச்சி செவ்விளநீர் குலைகளின் மஞ்சள் நிறத்தில் ஈர்க்கப்படுவதால் இவற்றை அதிகளவில் பாதித்துள்ளது. இம்முறை பெரும்பாலும் செவ்விளநீர் ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு பயிரிடப்படுகிறது.

பெரும்பாலான செவ்விளநீர் காய்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேவேளை கடந்த ஆண்டு, 95 லட்சம் செவ்விளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெள்ளை ஈ பாதிப்பு பரவி வருவதால், எதிர்காலத்தில் செவ்விளநீர் ஏற்றுமதிச் சந்தையும் பாதிக்கப்படலாம்.

இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந்தோப்புகள் வெள்ளை ஈ தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளை ஈயை அழிக்கக்கூடிய பூச்சிகொல்லி அல்லது பிற பூச்சிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed