• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்புக்கள்

Okt. 7, 2022

பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது.

வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. இந்த மாதத்தில் மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அதிகளவு நன்மையை கொடுக்கக்கூடியது. அதன்படி புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம் அக்டோபர் 7-ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை வருகிறது.

வெள்ளிக்கிழமை பிரதோஷம் சிறப்பு: இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை பிரதோஷம். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவனாரையும், நந்திதேவரையும் வணங்கி அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால் கடன், தரித்திரம் முதலான பொருளாதார சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கி, சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed