• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் 

Okt 4, 2022

சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது.

யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள் தான். அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம் பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும்.

சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து காணொளி பார்ப்போம் என்றுதான் நீங்கள் இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

இனி அந்த எண்ணத்திற்கும் வேட்டு வைக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது யூடியூப் நிறுவனம். அதாவது, நீங்கள் 4கே தரத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு ப்ரீமியம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்று யூடியூப் நிறுவனம் அறிவுறுத்துகிறதாம்.

இந்த நிபந்தனை தொடர்பில் யூடியூப் நிறுவனம் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால், பயனாளர்கள் 4k காணொளியை பார்க்க முயன்றபோது இத்தகைய நிபந்தனை அவர்களது ஸ்கிரீனில் தோன்றியதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ரெடிட் சமூக வலைதளத்தில் இதுதொடர்பான புகாரை பயனாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெடிட் பயனாளர் ஒருவரின் பதிவில், 4k வீடியோ பார்க்க முயன்றபோது, “ப்ரீமியம் – அப்கிரேட் செய்ய டேப் செய்யுங்கள்’’ என்ற வாசகம் ஸ்கீரினில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, இதன் அர்த்தம் என்னவென்றால் இனியும் நீங்கள் 4k தரத்திலான வீடியோக்களை இலவசமாகப் பார்க்க இயலாது.

உங்களுக்கு வேண்டுமானால் 1440பி அல்லது 2k தரத்திலான வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம். இலவசமாக கிடைக்கும் அதிகப்பட்ச தரத்திலான வீடியோக்கள் இந்த வகையைச் சார்ந்தவை தான்.

சாதாரணமாக நாம் மொபைலில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இந்த 4k தரம் தேவைப்படாது. ஆனால், டிவி உள்ளிட்ட பெரிய திரைகளில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக 4k தரம் இருந்தால் தான் பிக்சர் உடையாமல் தெளிவாக தெரியும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed