• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிற்சர்லாந்தின் மாநில தேர்தலில் தமிழருக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

Okt. 4, 2022

சுவிற்சர்லாந்து அரசியலில் இளைய தலைமுறையை சார்ந்த றூபன் சிவகனேசன் சுக் (Kanton ZUG) மாநில அரசின் தேர்தலில்(Kantonrat) 5 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 2ம் திகதி நடைபெற்று முடிந்த மாநில அரசிற்கான தேர்தலின் போது SP- Sozialdemokratische Partei கட்சியின் தலைமை பொறுப்புக்களும் இவர் கைவசமே இருந்தது.

இதனால் இந்த மாநிலத்தில் ஏனைய வேட்பாளர்களையும் வெற்றி நோக்கிய நகர்த்த வேண்டிய பொறுப்பும் இவரிடமே இருந்தது.

அதன் அடிப்படையில் முதலீடுகளின் குவியமா வலதுசாரிகளின் ஆதிக்கம் கூடிய பகுதியில் சோசலிச ஜனநாயக கட்சி (SP- Sozialdemokratische Partei) தனது பிரதிநிதித்துவத்தினை தக்க வைப்பது என்பது இலகுவான விடயமல்ல.

இதனை ஓர் தமிழனின் தலைமையில் சாதித்தது என்பது சுவிற்சர்லாந்து வாழும் தமிழர்களிற்கு கிடைத்த மிக பிரமிதமாகும்.

இவ்வெற்றி அவரது கடின அரசியல் உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

றூபன் சிவகனேசன் சுக் தனது அரசியல் பிரவேசத்தினை 2006ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற நான்கு தேர்தலில்களும் தனது மாநில அரசின் பிரதிநிதித்துவத்தை மக்களின் வாக்குகளினால் தக்கவைத்து கொண்டார்.

இவருக்கு எவ்வித அரசியல் பின்புலமும் அற்று தனியே தனது சுக் மக்களிற்கான தேவைகளில் அக்கறை எடுத்து மக்களிற்கு அருகாமையில் இருந்ததாலேயே இம் மாபெரும் வெற்றி சாத்தியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுக் (Kanton ZUG) மாநிலத்தில் நிதி மற்றும் பல நிறுவனங்கள் வரிச்சலுகைகளுக்காக மாநிலத்திலேயே தலமைப்பீடங்களையும் நிறுவி உள்ளனர்.

இதனால் இங்கு சாதரண வாழிட வசதிற்கான வாடகைகள் மிக அதிகமாகும். இதனால் நடுத்தர வருமானம் உள்ளவர்களும் வயோதிபர்களினாலும் மலிந்த வாடகையில் வீடுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.

இவ்விடயத்தினை கவனத்திலெடுத்து மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி மாநில நாடாளுமன்றத்தின் முன்வைக்கும் வகையிலான கோரிக்கையை தாயாரித்துள்ளனர்.

இவ்வகையில் இவர் தனது அரசியலில் பல்வேறு விடயங்களை தனது முயற்சியில் செய்து வந்துள்ளார்.

நாட்டில் உள்ள குடியேற்ற வாதிகளினதும், அகதி தஞ்சம் கோரியவர்களிற்காகவும் மற்றும் பல் பாலின அடையளங்களை கொண்டவர்களின் சமூக நல உரிமைகளிற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல போராட்டங்களை மேற்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed