• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அக்டோபர் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி! எந்தெந்த ராசிக்கு சாதகமான சூழ்நிலை

Okt 2, 2022

அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்கை ஒளியை போல் பிரகாசிக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் சூரியன் பெயர்ச்சி

அக்டோபர் மாதம் துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். அக்டோபர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.

அதன்படி, அக்டோபர் 17ம் தேதி மாலை 7.22 மணிக்கு சூரியன் தன் ராசி மாறி, துலாம் ராசிக்குள் நுழைகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், துலாம் ராசியில் இருக்கும் சூரியன் வலுவிழந்த நிலையில் இருப்பதால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். தொழிலில் பதவி உயர்வுடன் சம்பளமும் உயரும். நீங்கள் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த மாதத்தின் தொடக்கம் சிறப்பான நேரம்.

உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலனைத் தரும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரும். முயற்சிகளுக்கும், கடின உழைப்பிற்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிப்பதன் மூலம், நீங்கள் எதிர்காலத்திற்கான பணத்தையும் சேர்க்க முடியும்.

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நிலைமை நன்றாக இருக்கும். திடீர் பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சிறப்பான பலன்கள் உண்டாகும். வருமானம், சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிதி ரீதியிலான விஷயங்களிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நிதி நிலை வலுப்பெறும். வருமானம் பெரும். அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு இந்த நேரம் சிறப்பான நேரம். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed