• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு

Okt. 1, 2022

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 410 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 510 ரூபா என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா IOC நிறுவனம் செயற்படுமென அதன் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed