• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பருத்தித்துறை பகுதியில் 42 கிலோகிராம் கஞ்சா மீட்பு.

Sep. 23, 2022

வடமராட்சி சக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டது.

சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.

படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல் காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் கடலால் படகு மூலம் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரி திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed