• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது!

Sep. 23, 2022

டல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு (22-09-2022) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 02 ஆண்களும் 03 பெண்களும் அடங்குகின்றனர். 07 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள், வெடித்தலத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed